--- --:--:-- --

சென்னையில் இருந்து தொடங்கும் சர்வதேச விமான சேவை!

7

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரொனா முன்னெச்சரிக்கையாக விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் உள்ளூர் சேவை தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை 9.25 மணி அளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னையிலிருந்து அபுதாபி செல்கிறது.

 

அது மட்டுமின்றி சென்னையின் உள்நாட்டு முனையத்தில் இருந்து மொத்தம் 40 விமானங்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் இன்று பிற்பகல் முதல் விமான சேவை தொடங்குகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 12.35 மணிக்கும் மறுமார்க்கத்தில் பிற்பகல் 1.20 மணிக்கு சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

 

இதை போல இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சேலம், சென்னை விமான சேவையை ட்ரூ ஜெட் நிறுவனம் நாளை தொடங்குகிறது. 27ஆம் தேதியன்று காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் காலை 8.25 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் காலை 8.50 க்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு 9.50 க்கு சென்னையை வந்தடைகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon