ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை தர தடை! அந்த மருந்தால் இறப்பு சதவீதம் அதிகரிக்கிறதா ?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரொனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல நாடுகளும் தனியார் அமைப்புகளும் மருந்துகளை தயாரித்து பரிசோதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிக் கிலோராக்குவின் மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தை ஏற்றுமதி செய்தது.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரொனா தொற்றுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தை எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் தி லேன்சன் மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தால் இறப்பு விகிதம் 34 விழுக்காடு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்த நிலையில் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெடிராஸ் covid-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்து வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது என்றார். நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த தரவுகளின் அடிப்படையில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவது என்று WHO செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பிற வகையான பரிசோதனைகள் தொடரும் என்றும் தெரிவித்தார். covid-19 பாதிக்கப்பட்டோரின் நலனை கருத்தில் கொண்டு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்துகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அவர் கூறினார்.






