--- --:--:-- --

பிரதமரை யாராவது இழிவாக பேசினால் அவர்களை அடியுங்கள் கட்சி உங்கள் பின்னால் நிற்கும். காரைக்குடியில் ஹெச். ராஜா பேட்டி!

20

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இவ்வாறு கூறினார். மேலும் பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று பேசியிருக்கும் ஜோதிமணியையும், பிரசன்னாவையும் கைது செய்ய வேண்டும் என்ற எச்.ராஜா, தயாநிதி மாறனையும், ஆர்.எஸ்.. பாரதியையும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

 

தி க, திமுக போன்ற திராவிட இயக்கங்கள் அனைத்தும் எப்போதுமே பட்டியலின மக்களின் விரோதிகள் என்ற H. ராஜா, முரசொலி இட விவகாரத்தில் ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வருவாய் துறையில் உள்ள ஆவணத்தை யார் வேண்டுமானாலும் திருத்தலாம்,காசு கொடுத்தால் வருவாய் துறையினரே, ஆவணங்களை திருத்தி கொடுத்து விடுவார்கள் என்றும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon