சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அகதிகள் முகாமில் இருந்துவரும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், நலிவடைந்தவர்கள் என சுமார் 320 நபர்களுக்கு அரிசி மளிகை உட்பட 1000 ரூபாய் மதிப்பிலான தொகுப்பினை சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் குழுவும், மற்றும் திருப்பத்தூர் நீதிமன்றமும் இணைந்து நிவாரணப் பொருள் வழங்கியது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் அவர்களும், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி பாபுலால் அவர்களும், சட்டப் பணிக்குழு செயலாளர் மோகனா அவர்களும், திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் அவர்களும், மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி அவர்களும் ,காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை அவர்களும் ,திருப்பத்தூர் தொகுதி ஒன்றிய குழு பெருந்தலைவர் சண்முகவடிவேல் அவர்களும், மற்றும் வருவாய் ஆய்வாளர் கிராம அலுவலர் அனைவரும் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கான நன்கொடைகளை காரைக்குடி கோட்டையூர் வீரப்ப செட்டியார், மற்றும் திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், வழக்கறிஞர் முருகேசன் ,ஆகியோர் இணைந்து வழங்கினார்கள் .
மேலும் திருப்பத்தூர் பார் அசோசியேசன் தலைவர் அண்ணாமலை, செயலாளர் செய்யது முகமது ,சிங்கம்புனரி வழக்கறிஞர் சங்கத் தலைவர் அறிவுடைநம்பி, செயலாளர் துரை வேலவன், கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை சட்ட பணிக்குழு உதவியாளர் கோடீஸ்வரன் சமூக இடைவெளியோடு ஒருங்கிணைப்பு செய்தார்.