கொரொனா தடுப்பு பணிகளுக்காக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரொனா தடுப்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரியாக ஏற்கனவே இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் அமைக்கப்பட்டு இருப்பவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உதயச்சந்திரன் ஐஏஎஸ், அன்பு ஐபிஎஸ், ஆகியோரும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐஏஎஸ், வனிதா ஐபிஎஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்பிரமணியன் ஐஏஎஸ், பவானீஸ்வரி ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.