போதையில் பைக்கில் வந்த புள்ளிங்கோ….போலீசாரின் மீது மோதல்!
சென்னை காமராஜர் சாலையில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் நேப்பியர் பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து போலீசார் மீதும் மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் போலீசார் ஒருவர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து வாகனத்தில் இருந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.






