--- --:--:-- --

இரட்டைச் சகோதரிகள் தூக்கிட்டுத் தற்கொலை!

4

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இரட்டையர் சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காட்பாடி மாருதி நகரை சேர்ந்த 16 வயதான அந்த சிறுமிகள் இருவரும் மதியம் தனது அறையில் வழக்கம் போல ஆன்லைனில் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.

 

2 மணிக்கு மேலாகியும் சிறுமிகள் இருவரும் சாப்பிட வராததால் பெற்றோர் அருகில் சென்று பார்த்தபோது புடவைகளை கொண்டு இருவரும் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon