18 வயது நிரம்பாத தன் மகளின் காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட தந்தை உடனடியாக அவசர திருமணம் ஒன்றை நடத்தியுள்ளார். கணவரின் குடும்பம், காதலரின் குடும்பம், தனது குடும்பம் என மூன்று தரப்பிலும் சிக்கிய சிறுமி தப்பித்தது எப்படி? காதல் திருமணம் என்றாலு,ம் நிச்சயத்து திருமணம் என்றாலும் முதலிரவு என்பது மறக்க முடியாத அனுபவமாகவே பெரும்பாலானவர்களுக்கு அமையும்.
ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியின் முதலிரவன்று நடந்த விசித்திர சம்பவத்தால் சிறுமியின் குடும்பமே கோவில் சிக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலியை அடுத்த புலியூர்குறிச்சி சேர்ந்தவர் மாடசாமி. இவரது 16 வயது மகள் தக்கலை அருகே உள்ள கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
தினமும் கல்லூரிக்கு நடந்து சென்ற சிறுமிக்கு சாலையோர நடைபாதையில் வியாபாரியான 22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றி திரிந்த தோடு தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மகளின் காதல் விஷயத்தை அறிந்த தந்தை மாடசாமி அதிர்ச்சி அடைந்தார்.
அதையடுத்து மகளை வீட்டில் தனிமை படுத்தினார். சென்னையில் பணியாற்றி வந்த 36 வயது விவேக் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். உடனடியாக அவரை மாப்பிள்ளையாக நிச்சயத்த மாடசாமியை கடந்த 14ம் தேதி யாருக்கும் தெரியாமல் அவருக்கும் தனது மகளுக்கும் திருமணம் நடத்தியுள்ளார்.
இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என சிறுமி வலியுறுத்தியும் மாடசாமி காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்ற நிலையில் திருமணம் நடந்த அன்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விவேக் முதலிரவு அறைக்கு சென்றபோது அங்கு சிறுமி தனது காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்த விவேக்கிற்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சிறுமி எடுத்துக் கூறினார். மேலும் தன்னை வற்புறுத்த வேண்டாம் என்றும் காதலுடன் தான் வாழப் போவதாகவும் சிறுமி தெளிவாக கூறிவிட்டார். மனம் நொந்த விவேக் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கிடையே காதலன் சுதீஷை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.
சிறுமியின் வீட்டின் வாசல் கதவு பூட்டி இருக்கவே காதலன் சுற்றுச் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உள்ளார். அவரை பார்த்த விவேக்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு செல்போனில் புகார் அளித்தனர். தக்கலை போலீசார் உடனடியாக விவேக்கின் வீட்டிற்கு சென்று விசாரிக்க நிலைமை தலைகீழாக உள்ளது.
தனக்கு 17 வயதுதான் ஆகிறது என்றும் ஏற்கனவே காதலன் சுதீஷ் தனக்கு தாலி கட்டி விட்டார் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது விருப்பமின்றி விவேக்குடன் கட்டாயத் திருமணம் செய்து விட்டதாகவும் கூறி அழுதுள்ளார். சுதீஷிடம் விசாரித்தபோது காதலிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு பெண் கேட்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் நிலவரம் கலவரம் ஆகி விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியை மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 17 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததால் தந்தை மாடசாமி, கணவர் விவேக், காதலன் சுதீஷ் மற்றும் விவேக்கின் பெற்றோர் என ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.