--- --:--:-- --

நெட்டிசன்களுக்கு உச்சகட்ட கோவத்தை வரவழைத்த டிக் டாக் வீடியோ!

10.1

டிக் டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்தி பேன் டிக் டாக் என்ற ஹேஸ் டேக்கை நெட்டிசன்கள் இந்திய அளவில் டிரண்ட் ஆக்கினர்.இதற்கான காரணம் என்ன? சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது.

 

டிக்டாக்கில் ஒரு கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் கொண்ட பைசல் சித்திக் என்பவர் இதை வெளியிட்டவர். பெண்கள் மீது அமிலம் வீசுவதை ஊக்குவிப்பது போல் இந்த வீடியோ இருப்பதாக புகார் எழுந்தது. ஃபைசல் சித்திக் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் வலியுறுத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட வீடியோவை டிக் டாக் நீக்கியது. எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தமது வீடியோவுக்கு பைசல் சித்திக் மன்னிப்பு கோரினார். எனினும் இதுபோன்ற வீடியோக்களை அனுமதிக்கும் டிக் டாக் செயலியை தடைசெய்ய வேண்டுமென நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.

 

இந்திய அளவில் அவர்கள் மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலியின் மதிப்பீடு 4.5 இலிருந்து 2 ஆக குறையும் அளவிற்கு நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். டிக் டாக் செயலிக்கு எதிர்ப்பு கிளம்புவது ஒன்றும் புதிதல்ல.

 

டிக்டாக்கில் ஆபாச வீடியோக்கள் பதிவிடுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இதனையடுத்து ஆபாசமாக இருந்த 60 லட்சம் வீடியோக்களை டிக்டாக் நீக்கிய பிறகு உயர் நீதிமன்ற தடை நீக்கப்பட்டது.

 

இருப்பினும் வன்முறையை தூண்டும் வகையிலும் ஆபாசமாகவும் வீடியோக்கள் பதிவிடுவது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. டிக்டாக் வீடியோ வுக்காக சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் சிலர் உயிரை விடுவதும் தொடர்ந்து வருகிறது. டிக் டாக் செயலி மீண்டும் தடை செய்யப்படுமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon