--- --:--:-- --

அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

12

கொரொனாவின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் 12 லட்சம் குழந்தைகள் அடுத்த ஆறு மாதங்களில் உயிரிழக்கக் கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான unicef வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ்ரிமெம்பர் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் நிறுவனத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் .

 

இந்த ஆய்வில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் வழக்கமான சுகாதார சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குழந்தை பிறப்பு, சிசு பாதுகாப்பு, நோய்த்தடுப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

பல நாடுகளில் பள்ளிகள் மூலமாக தான் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும் தற்போது அவை மூடப் பட்டிருப்பதால் முறையான உணவு இன்றி தவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் பெரும் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் அடுத்த 6 மாதங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா. சோமாலியா ஆகிய நாடுகளில் உயிரிழப்பு அதிகளவில் இருக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக unicef யூனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon