8 நிமிடங்கள் வரை காற்றில் உலவும் கொரோனா!
சாதாரணமாக பேசும் போது வாயிலிருந்து வெளிப்படும் சுவாசத் துளிகளில் இருக்கும் கொரொனா வைரஸ் 8 நிமிடங்களுக்கும் அதிகமாக அந்த இடத்தில் உயிருடன் இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே மருத்துவமனைகள், வீடுகள், வாகனங்கள், சொகுசுக் கப்பல்கள் மற்றும் காற்று சுவாசம் அதிகம் இல்லாத இடங்களில் குழு குழுவாக தொற்று ஏற்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் ஒரு நிமிடம் சத்தமாக பேசினால் வெளியாகும் சுவாச துளிகளில் 8 நிமிடம் காற்றில் உலவக்கூடிய ஆயிரம் வைரஸ் கிருமிகளின் அணுக்கள் இருப்பதாகவும், லேசர் ஒளிகற்றைகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.






