கை குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


காஞ்சிபுரத்தில் பிரசவம் முடிந்த கையோடு பச்சை குழந்தையுடன் காதலன் வீட்டிற்கு சென்ற பெண்ணை அவர்கள் ஏற்காததால் கைக்குழந்தையோடு கிணற்றில் குதித்து இருக்கிறார் அந்த பெண்மணி. நான்காவதாக பிறந்த பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் குழந்தையோடு கிணற்றில் குதித்துள்ளார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் கிராம காலனியை சேர்ந்தவர் துப்புரவு பணியாளரான 30 வயதான மகாலட்சுமி. திருமணமான 15 ஆண்டுகளில் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். மறைமலை நகரில் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார் மகாலட்சுமி.

அவருடன் உத்திரமேரூர் அடுத்த குப்பையை நல்லூரை சேர்ந்த திருமணமான 40 வயதான பிரபு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலின் விளைவாக மகாலட்சுமி நான்காவது முறையாக கருவுற்றார். இதனால் பிரபு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். மகாலட்சுமியின் கள்ளக்காதலை அவரது தாய் வீட்டாரும் ஏற்காத நிலையில் சமீபத்தில் அவருக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

 

சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஊரில் உள்ள கள்ளக்காதலன் வீட்டிற்கு பச்சிளம் குழந்தையுடன் சென்றுள்ளார். மகாலட்சுமியை அங்கு பிரபுவின் உறவினர்கள் அவரை ஏற்க மறுத்ததால் மன விரக்தி அடைந்த மகாலட்சுமி குழந்தையுடன் வெளியேறியுள்ளார். இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மகாலட்சுமி அங்கிருந்த கிணற்றில் பார்த்ததும் அதில் பச்சிளம் குழந்தையுடன் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துவிட்டு உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வந்து கிணற்றில் குதித்து மகாலட்சுமியை மீட்டனர். 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இரவு 10 மணிக்கு குழந்தையின் சடலத்தை மீட்டனர். மகாலட்சுமி மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


Leave a Reply