--- --:--:-- --

கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது!

15

தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 58 ஆக இருந்த நிலையில் இன்று 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 324 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் இன்று மற்றும் 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூடலூர் மாவட்டத்தில் 95 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 20 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 34 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கு இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 6 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 5 பேருக்கும், கொரொனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கரூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தமிழகத்திலேயே ஒட்டுமொத்தமாக பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon