--- --:--:-- --

யார் கெத்து என்று நடந்த தகராறால் இளைஞர் படுகொலை!

12.1

ஊரில் யார் கெத்து என்பதை காட்டுவதற்கு டீக்கடையில் யாரு கெத்து என்று தொடங்கிய வாய் தகராறு கொலையில் முடிந்தது. இதில் 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் நடந்தது என்ன? ஏழு மாதங்களுக்கு முன்பே டீக்கடையில் போதையில் நடந்த வாய்த்தகராறு முன் பகையாகி அப்பாவி இளைஞர் மாரிமுத்துவை படுகொலை செய்துள்ளார்.

 

புல்லட் கருப்பையா சிக்கியது எப்படி? திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குளத்துப் பட்டியை சேர்ந்தவர் 53 வயதான நடராஜன். இவரது மகன் 30 வயது மாரிமுத்து. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்துவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் தந்தை, மகன் இருவரும் விவசாயத்தை கவனித்து வந்தனர்.

 

அதை ஊரை சேர்ந்த விவசாயியான கருப்பையா தனது கூட்டாளிகள் சிலருடன் புல்லட்டில் கெத்தாக ஊர் சுற்றிக் கொண்டு வருவார். ஊரில் என்ன பிரச்சினை என்றாலும் கருப்பையாவை அவரது கூட்டாளிகள் உசுப்பேற்றி அதில் தலையிட வைப்பது வழக்கம். 7 மாதங்களுக்கு முன்னால் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போது கருப்பையா என்பவர் போதையில் டீக்கடைக்கு வந்துள்ளார்.

 

அப்போது நடராஜனும் கருப்பையாவுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கருப்பையா தனது செருப்பை கழற்றி நடராஜனை அடித்துள்ளார். காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். பின்னர் ஊர் பெரியவர்களின் முயற்சியின் பேரில் சமாதானமாகி புகாரை திரும்பப் பெற்றார். எனினும் நடராஜனும் கருப்பையாவுக்கும் இடையே முன்விரோதம் நீர் பூத்த நெருப்பாய் இருந்தது.

 

இதனிடையே உள்ளாட்சி தேர்தலில் இருவரும் எதிரெதிர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் நடராஜன் பிரச்சாரம் செய்த வேட்பாளர் வெற்றி பெற்றதால் கருப்பையாவுக்கு அது கௌரவப் பிரச்சனையாக மாறியுள்ளது. தீராத பகையாக மாற்றிய கருப்பையா நடராஜரை பழிவாங்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளார்.

எப்போதும் தனது புல்லட்டில் ஊருக்குள் கெத்தாக சுற்றித்திரியும் கருப்பையா குடித்துவிட்டு வேண்டுமென்றே நடராஜர் வீட்டின் அருகே சத்தமாக புல்லட்டை ஓட்டிச் செல்வதை வழக்கமாகக் கொண்டார். மே 3ஆம் தேதி இரவு 8 மணிக்கு கள்ளச்சந்தையில் மது வாங்கிக் குடித்தார் கருப்பையா. அப்போது நடராஜனின் மகன் மாரிமுத்து இயற்கை உபாதையை கழிக்க ஒதுக்குப் புறமாக சென்று கொண்டிருந்த அவரை பார்த்த கருப்பையா தனது புல்லட் வண்டியில் அவர்மீது இடிப்பது போல் சென்று பயம் காட்டினார் .

 

ஆத்திரமடைந்த மாரிமுத்து கருப்பையாவை திட்டியுள்ளார். போதையில் இருந்த கருப்பையா கோபம் முற்று மாரிமுத்துவை பழி தீர்க்க முடிவு செய்துள்ளார். தனது கூட்டாளிகளிடம் தன்னை கெட்டவார்த்தையால் மாரிமுத்து திட்டி விட்டதாக கருப்பையா புலம்பியுள்ளார். கூட்டாளிகளை நமது பேச்சை கேட்கும் போது மாரிமுத்து எப்படி உங்களை திட்டலாம் எனக்கருதி அவரை உசுப்பேற்றி உள்ளன.

 

மேலும் மாரிமுத்துவை ஊர் முழுவதும் தேடி அன்று இரவு 9 மணிக்கு ஊரில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்துவை கண்டனர். மாரிமுத்துவின் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த கருப்பையா கூட்டாளிகள் அவரை கத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ஊர்மக்கள் மாரிமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

 

கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த நத்தம் போலீசார் தப்பியோடிய கருப்பையா, பூசாரி குமார், முத்துலட்சுமி, 16 வயது சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். ஊரில் கெத்து காட்ட வேண்டும் என்று புல்லட்டில் சுற்றி தெரிந்த நபர் அப்பாவி இளைஞரை வெட்டிக்கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon