தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை அவகாசம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வு, மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த தேதி உள்ளவர்கள் அபராதம் இன்றி மின் கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் நுகர்வோர்கள் தங்களின் முந்தைய மாத கணக்கெடுப்பின்படியோ அல்லது மின் அளவிலுள்ள மின் நுகர்வுக்கு ஏற்பவோ மின் கட்டணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் முந்தைய தொகையை செலுத்தலாம் என்றும் அடுத்த மின் கணக்கெடுப்பில் அந்த தொகை சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply