செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நசரத் புரத்தில் 18 பேருக்கு கூர்ண நோய் தொற்று என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மதுராந்தகத்தில் 5 பேருக்கும், மேற்கு தாம்பரத்தில் இரண்டு பேருக்கும், கூடுவாஞ்சேரியில் 4 பேருக்கும், ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கும், திருநீர்மலையில் இரண்டு பேருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பம்மலில் மூன்று பேருக்கும், ஜமீன் பல்லாவரத்தில் ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

 

சென்னையை அடுத்த மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு இருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப் பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

 

பதிவேடு நபர்கள் 4 பேருக்கும், பால் லோடு ஏற்றுபவர்கள் இரண்டு பேருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து கேகே நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் இன்று செல்லவில்லை.


Leave a Reply