கிம் ஜோங் உன்னுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்படவில்லை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வடகொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை என தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு பிறகு வெளியுலகில் தென்படாத கிம் ஜாங் உன்னுக்கு இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாகவும் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 

இந்த செய்தி தவறானவை என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் நடந்த உரத்தொழிற்சாலை நிகழ்ச்சி ஒன்றில் கிம் ஜாங் உன் பங்கேற்ற வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில் தென் கொரிய அதிபர் அலுவலகம் கிம் ஜாங் உன்னுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Leave a Reply