உடுமலைப்பேட்டையில் 2000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2 டன் மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. பழனியில் இருந்து கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த டெம்போ வாகனத்தில் மடத்துக்குளம் பகுதியில் சோதனைக்காக காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.

 

பால் பொருட்களை ஏற்றிச் செல்வதாக வாகனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் மாட்டிறைச்சி இருந்தது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைத்தனர்.

 

இந்நிலையில் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதால் மாட்டிறைச்சி புதைக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Leave a Reply