இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்

Publish by: மகேந்திரன் --- Photo :


கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருவதால் , தமிழக அரசு கடந்த 24 . 03 . 2020 – ம் தேதி முதல் 144 கு.வி.மு.ச படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருந்து வருகிறது .இதுதொடர்பாக , தமிழக அரசின் உத்தரவின்பேரில் அனைத்து அரசு மதுபானக்கடைகளும் மூடப்பட்டன .இந்நிலையில் , மதுபோதைக்கு அடிமையான சிலர் போதைக்காக பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது .

 

இதில்,ஒரு தரப்பினர் மருந்துக்கடைகளில் குறைந்த அளவு ஆல்கஹால் தன்மை கொண்ட ( Tydol , Diazepam , Mantrax , Alprazolam , Nitrazepam , Methamphetamine , Chlordiazepoxide & etc ) மருந்துகளை போதைக்காக பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.

 

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்துகடைகளில் ( Medical Shop ) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்படும் மருந்து சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டும்.பொதுமக்கள் யாரேனும் போதை தரக்கூடிய கலவை மருந்துகளை கேட்பாராயின் அவை மருத்துவரால் சிபாரிசு செய்யப்பட்டவை தானா என்பதை தணிக்கை செய்து பின்பு விநியோகம் செய்ய வேண்டும் .

 

இதில் , ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்யேக கைபேசி எண் . 9489919722 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் . யாரேனும் இலாப நோக்கதோடு தவறுதலாக மருந்துகளை விநியோகம் செய்வது தெரியவந்தால் மருந்து கடையின் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

அதுமட்டும் அல்லாது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய சிபாரிசு செய்யப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .V.வருண் குமார் எச்சரித்துள்ளார்.


Leave a Reply