மகாராஷ்டிராவை தொடர்ந்து உ.பி.யிலும் 2 சாதுக்கள் கொலை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு சாதுக்கள் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 2 சாதுக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் உத்தர பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் கிராமத்தில் இரண்டு சாதுக்கள் .

 

திருட்டு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞன் மீது குற்றச்சாட்டு தெரிவித்து சாதுக்களை அந்த இளைஞன் நேற்றிரவு கொலை செய்துள்ளான். இது குறித்து விசாரணை நடத்திய அந்த கிராமத்தில் பதுங்கியிருந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply