--- --:--:-- --

ஆந்திர மாநிலத்தில் ரூ.1400 கோடி வட்டியில்லாக் கடன்..!

10

ஆந்திர மாநிலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் தொடங்கியுள்ளார். 8 லட்சத்து 78 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 91 லட்சம் பெண்கள் இதனால் பயன் பெறுவர். இவர்களின் வங்கி கணக்குகள் மூலம் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கப்படும் வட்டியில்லா கடன் திட்டம் எனப்படும்.

 

இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் உலக பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் ஏழைக் குடும்பங்களின் வறுமை நீங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

புல்லட் ரயில் உள்ளிட்ட பெரும் செலவு பிடிக்கக்கூடிய திட்ட செலவினங்களை குறைத்து அந்த தொகையை மக்களுக்குக் கொடுக்கலாம் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

 

டெல்லியில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி அரசு ஊழியர் ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு, பிற சலுகைகள் ரத்து போன்ற நடவடிக்கைகளை காட்டிலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவிலான புல்லட் ரயில் திட்டம் மற்றும் 23 ஆயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இதில் மீதமாகும் தொகையை தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் கையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும் அரசுக்கு அபிஷேக் சிங்வி வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon