அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் பிரச்சினையா ? 94981 73173 , 98425 30382 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க — கோவை மாவட்ட காவல்துறை அறிவிப்பு !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.அத்தியாவசிய தேவைகளான அரிசி,காய்கறிகள்,மளிகைப்பொருட்கள் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை தங்களது வாகனங்களில் ஏற்றி ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.இதனால் விவசாயிகள்,வியாபாரிகள்,வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கும் வகையில் கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தனி அலுவலரை நியமனம் செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

அறிக்கையில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காகவும், ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையிலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட்ட காவல் துறை சார்பில் காவல் ஆய்வாளர் யமுனா தேவி தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வது தொடர்பாக விவசாயிகளுக்கோ, வியாபாரிகளுக்கோ, வாகன உரிமையாளர்களுக்கோ, வாகன ஓட்டுநர்களுக்கோ ஏதாவது பிரச்சனை ஏற்படும் நிலையில் தனி அலுவலர் யமுனா தேவியை 94981 73173, 98425 30382 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனையை தெரிவித்தால் அவர் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் மேற்கொள்வார் எனவும்,கோவை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கையாளும் விவசாயிகள், வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படியாக கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Leave a Reply