குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேரிடர் காலத்தில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பத்திரிக்கையாளர்களுக்கு கொரொனா இருப்பதாக வரும் செய்திகளில் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ள அவர் போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதால் அவற்றை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கை, சினிமா ஊழியர்கள் உள்ளிட்ட 14 வகையான தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதற்கு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்த இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதனை கருத்தில் கொண்டு மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கை, சினிமா ஊழியர்கள் சிறு வணிகர்கள் உள்ளிட்ட 14 வகையான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அந்தந்த வாரியங்களில் பதிவு செய்துள்ள 86 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply