அரியலூர் கோயிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அரியலூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் கோயில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுமாறு அபூர்வ நிகழ்வு அரங்கேறியுள்ளது .ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ஐந்தாம் தேதி முதல் 10ம் தேதி வரை லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

 

தமிழ் மாதங்களில் சித்திரை மாதத்தில் சூரிய பகவான் ஈசனை வழிபடுவது அதிகமாக பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று காலை சூரிய உதயத்தின் போது சூரியக்கதிர்கள் நேரடியாக லிங்கத்தின் மீது பட்டு ஒளிர்ந்தது. வருடங்களில் இரண்டு மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 

தற்போது 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.


Leave a Reply