கொரோனாவை கட்டுப்படுத்த பிசிஜி தடுப்பூசி உதவுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வேகமாக பரவி வரும் கொரொனா வைரஸை கட்டுப்படுத்த காச நோய் தடுப்பூசியான பிசிஜிஐ பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. பிசிஜி என்பது காச நோய்க்கான தடுப்பு. இந்தியாவின் இந்த தடுப்பூசி குழந்தை பிறக்கும் போதே போடப்படுகிறது. பிசிஜி தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இந்த நிலையில் கொரொனாவைத் தடுக்கும் மருந்தாகப் பிசிஜி தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரம் முக்கிய ஆய்வு தொடங்க இருப்பதாகவும் ஆய்வு முடிந்து உறுதி செய்யும் வரை சுகாதார பணியாளர்களுக்கு பிசிஜி தடுப்பூசியை பரிந்துரைக்க மாட்டோம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

கொரொனா அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில் கொரொனா வேடமணிந்து 7 வயது சிறுவன் விழிப்புணர்வு ஏற்படுத்தினான். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் சேர்ந்த மோகன் என்ற சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கொரொனா தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு தாய் தந்தையுடன் இணைந்து 7 வயது சிறுவன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறான்.

 

கொரொனா உருவம் போன்ற ஹெல்மெட் அணிந்து கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் வழங்கி கையை சுத்தப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். கொரொனா நோய் தொற்றிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Leave a Reply