--- --:--:-- --

ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்தால் ஜாமீன்!

5

மத்திய அரசின் ஆரோக்கியா சேது செயலியை பதிவிறக்கம் செய்வதுடன் பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜார்கண்ட் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு அண்மையில் ஆரோக்கிய செய்து செயலியை அறிமுகம் செய்தது.

 

பி‌எம் கேஸ் நிதிக்கும் பொதுமக்கள் தங்களாலான நன்கொடைகளை கொரொனா நடவடிக்கைகளுக்காக வழங்கலாம் என்றும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு ஜார்கண்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது ரயில்களை மறித்த வழக்கில் கைதான பாஜக முன்னாள் எம்பி உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.

 

வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை விசாரித்த நீதிபதி அனுப்பா சவுத்ரி குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்து பிரதமரின் நிவாரண நிதிக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்திடம் அளிக்குமாறும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்.

ஹரியானாவில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் மலர் தூவி நன்றி தெரிவித்தனர். கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் முன்னின்று பணியாற்றி வருகின்றனர்.

 

ஹரியானா மாநிலம் கொரொனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இரவு பகல் பாராமல் பணியாற்றிவரும் போலீசாருக்கு மக்கள் மலர்தூவி பாராட்டு தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon