கொரோனா கொண்டாட்டம் என்ற பெயரில் கிடா வெட்டி கறி விருந்து!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கும்பகோணத்தில் கிடா வெட்டி கறி விருந்து சாப்பிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கறி விருந்து சாப்பிட்டது ஒரு குற்றமா? தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கொரொனா கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் ஒன்றுகூடி கறி விருந்து படைத்துள்ளனர்.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தியாக சமுத்திரம் என்ற கிராமத்தில் திடலில் ஒன்று கூடிய 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிடாவெட்டி நீண்ட வாழையிலையில் ஒன்று கூடி விருந்துண்டு உள்ளனர். இந்த காட்சிகளை நண்பர்கள் மூலம் முகநூலில் நேரலை செய்ய அதில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கொரொனா அச்சம் இன்றி எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி இப்படி அலட்சியமாக நடந்து கொண்ட மற்ற இளைஞர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply