கொரொனா உள்ளதாக கூறி இருமிய இளைஞர்! ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட நண்பன்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த நண்பனை சக நண்பன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அடுத்த நொய்டாவில் நண்பர்கள் நான்கு பேர் லோடு எனும் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளனர். அப்போது பிரதீக் என்ற இளைஞர் தனது நண்பனான சுரேஷ் அருகே சென்று இருமியுள்ளார். மேலும் தனக்கு கொரொனா இருப்பதாக கூறியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த பிரதீக் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கியால் சுட்டார் பிரதீக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply