--- --:--:-- --

ஐதராபாத்தில் அதிகரிக்கும் இணையவழி மோசடி..!

11

ஊரடங்கு காலத்தில் ஹைதராபாதில் இணைய மோசடி அதிகரித்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மதுபான விற்பனையை அதிக அளவில் மோசடி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம் விற்பனை என்ற விளம்பரத்தைக் கண்டு ஆர்டர் செய்த சுல்தான் பஸார் பகுதியைச் சேர்ந்தவரின் கிரெடிட் கார்டில் இருந்து 92 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றியுள்ளனர்.

 

அதேபோல் காவலர் ஒருவரும் தனியார் நிறுவன ஊழியர் இருசக்கர வாகன விற்பனையில் உள்ளதால் சுமார் 62,000 ரூபாய் வரை இழந்துள்ளனர். இணையத்தில் விளம்பரம் கொடுப்பவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், ராணுவ வீரர் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்வதாக ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon