--- --:--:-- --

கொரோனா பாதித்த எம்.எல்.ஏவை சந்தித்த குஜராத் முதல்வர்..! தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்டார்!

12

கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த குஜராத் மாநில முதலமைச்சர் விஜய ரூபாணி தன்னை தனிமை படுத்திக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநில காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினரான இம்ரான் முதலமைச்ச அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது துணை முதலமைச்சரை உள்துறை அமைச்சர் அகமதாபாத் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

இந்த சந்திப்பில் வேறு இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு இம்ரான் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் இம்ரானுக்கு கொரொனா தொற்று உள்ளது நேற்று மாலை உறுதிப்படுத்தப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முதலமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இந்த சந்திப்பில் பங்கேற்ற மற்ற சிலரும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் இம்ரான் முதலமைச்சரிடம் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் அமர்ந்து இருந்ததாகவும் எனினும் மருத்துவ ஆலோசனைகள் கேட்கப்பட்டு இருப்பதாகவும் முதலமைச்சரின் செயலாளர் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில் கொரொனா அறிகுறி உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் முதல்வரை சந்திக்க வந்தது ஏன் என்று குஜராத் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் இதுபோன்ற சூழலில் முதலமைச்சர் காணொலி முறையில் எம்எல்ஏக்களை சந்திக்காமல் நேரில் அவர்களுடன் பேசுவது ஏன் என்று அரசை நோக்கி எதிரி கேள்விகளும் எழுந்துள்ளன.

வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து இருப்பதன் காரணமாக மே 3-ஆம் தேதி வரை வங்கிகளில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதற்கட்ட நாளின் போது வாடிக்கையாளர்கள் அதிகளவில் வங்கிகளுக்கு வந்ததன் காரணமாக மாலை 4 மணிவரை வங்கிகள் செயல்பட்டு வந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் உத்தரவு தற்போது கடுமையாக பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்கள் நடமாட்டம் குறைந்து உள்ளதோடு ஒரு மணிக்கு முன்னதாகவே பெரும்பாலானோர் தங்களது பணிகளை முடித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon