--- --:--:-- --

மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழப்பு! மெத்தனமாக செயல்பட்ட ஆலைக்கு சீல் வைப்பு

10

கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிப்காட்டில் உள்ள காக்ரோச் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த குமரேசன் என்பவர் ஆலையிலிருந்து ஒரு லிட்டர் எத்தனால் கொண்டுவந்து அதில் தண்ணீர் கலந்து தனது நண்பர்களான சந்திரகாசு, எழில் வானம், மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜ் ஆகியோருடன் குடித்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து சுந்தர் என்பவன் உயிருடன் நெஞ்சு எரிச்சல் காரணமாகவும், மற்ற நால்வரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுந்தர்ராஜ் மாயகிருஷ்ணன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மெத்தனமாக செயல்பட்டதாக சிப்காட்டில் உள்ள ஆலைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

 

ஆலையில் இருந்து எத்தனாலை எடுத்து வந்த குமரேசன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷ் குடித்த மூன்று பேர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் சேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்தவர் கோவையில் சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து தொழிலாளி ஒருவர் என்று மொத்தமாக 7 பேர் உயிரிழந்துள்ளது நினைவுகூறத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon