பொது இடங்களில் எச்சில் துப்ப தடை… 5 பேருக்கு மேல் கூடக் கூடாது.. பைக்கில் ஒருவர், காரில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்..! மத்திய அரசு அதிரடி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம், 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை, பைக்கில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். காரில் 2 பேருக்கு மேல் செல்லக் கூடாது என்பது போன்ற உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 2-ம் கட்டமாக 19 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

 

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.

 

5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.

 

இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். காரில் பயணிப்பவர்களாக இருந்தால் இரண்டு பேர் மட்டுமே செல்ல வேண்டும்.

 

பொது இடங்களில் மற்றும் அலுவலகங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply