தமிழகத்தில் இருந்து காட்டு வழியாக கேரளாவுக்குள் நுழைந்தால் 28 நாள் சிறைவாசம் என எச்சரிக்கை!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


கொரோனா எதிரொலியாக, தமிழகப் பகுதிகளில் இருந்து கேரள எல்லைக்குள் அனுமதியின்றியோ, காட்டு வழியாகவோ நுழைந்தால் 28 நாட்களுக்கு சிறை என அம்மாநில காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

 

இந்தியாவில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான மாநிலம் கேரளா தான். ஆனால் அம்மாநில அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால் அங்கு இப்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.மக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்களை ஒவ்வொரு வீடாக அம்மாநில அரசு கொண்டு சேர்த்ததே இதற்கு காரணம். அதே போல் மாநில எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், காட்டுப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குள் அத்துமீறி நுழைவது தொடர்வதால் கேரள காவல்துறையினர் கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். செங்கோட்டை – கொல்லம் நெடுஞ்சாலையில் கேரள போலீசார் அணிவகுத்துச் சென்ற படி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் ஜீப்பில் மைக் மூலம் எச்சரிக்கும் போலீசார், தமிழகத்திலிருந்து காட்டு வழியாக யாரும் கேரள எல்லைக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை பாயும். 28 நாட்களுக்கு சிறைவாசம் என போலீசார் எச்சரித்த வண்ணம் சாலைகளில் தீவிர ரோந்து செல்கின்றனர்.


Leave a Reply