ஊரடங்கு உத்தரவால் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 21 நாட்களாக இருந்து வந்த ஊரடங்கு முடிவடைந்து தற்போது இரண்டாவது ஊரடங்கான 19 நாட்கள் தொடங்கியுள்ளது.

 

மே 3ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த ஊரடங்கு தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் தற்போது வெளியாகி வருகின்றன. வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்போரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதிலும் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் குழந்தைகள் தொடர்புடைய ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

டெல்லி, மும்பை, கொல்கத்தா உட்பட இந்தியாவின் 100 பெரிய நகரங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான ஐசிபிஎஸ் என்ற அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.மேலும் வீட்டுக்குள் முடங்கி இருப்போர் பலர் இணையத்தில் அதிகளவில் ஆபாச வலைதளங்களை தேடுவதும் தெரியவந்துள்ளது.

 

ஸ்மார்ட்போன்களில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வலைதளங்களை தேடுவோரின் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. பல ஆபாச வலை தளங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதை தேடுவோரின் எண்ணிக்கையும் பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply