கொரொனாவை தொடர்ந்து அமெரிக்காவில் கடும் புயல்..அமெரிக்காவுக்கு அழிவு நிலையா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் அமெரிக்கா கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் மறுபக்கம் இயற்கை சீற்றமும் அந்நாட்டை மிரட்டி வருகிறது. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் தேசிய புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. டெக்ஸாஸில் இருந்து கரோலினா வரை கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

குறிப்பாக வீடுகளின் கூரைகள் காற்றில் வேகத்தில் தூக்கி வீசப்பட்டு உள்ளன. இதனால் பலரும் வசிப்பிடம் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. சூறாவளி காற்று மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் தற்காலிக மருத்துவமனையில் கடும் காற்றும் மழையும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சூறாவளி மழை தொடரக்கூடும் என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

 

அமெரிக்காவில் கொரொனா தொடர்பான பாதிப்புகள் கட்டுக்குள் வரும் சூழல் உருவாகி இருப்பதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகட், பென்சில்வேனியா, டெலாவர், ரோட் தீவுகள் ஆகிய ஆறு மாகாணங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் திட்டத்தை வகுக்க குழுக்களை அமைத்துள்ளனர்.

 

நியூயார்க் மாகாணம் மிக மோசமான நிலையை கடந்து விட்டதாக அம்மாநில ஆளுநர் ஆன்ட்ரூ தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தங்கள் மாகாணத்தில் 673 பேர் இறந்திருப்பதாகவும் முந்தைய நாட்களில் 150 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில் தற்போது அது குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்து வரும் நிலை மாறி சமநிலைக்கு வந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.


Leave a Reply