“இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!!” ஒரே நாளில் 1211 பேருக்கு தொற்று..! உயிரிழப்பு 358 ஆனது!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1211 பேருக்கு தொற்று உறுதியாகி எண்ணிக்கை 10453 ஆகவும், உயிரிழப்பும் ஒரே நாளில் 31 ஆக உயர்ந்து 358 ஆகியுள்ளது.

 

உலக நாடுகளை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ், இப்போது இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். மெதுவாக உயர்ந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, இப்போது தினமும் ஆயிரங்களை கடக்க ஆரம்பித்துள்ளது. இதில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

 

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1211 பேருக்கு பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து 10453 ஆக அதிகரித்துள்ளது. இதில் டெல்லியில் அதிகபட்சமாக 356 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் மொத்த பாதிப்பு 1510 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் தான் நாளுக்கு நாள் பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 352 பேருக்கு பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2334 ஆக உயர்ந்து, இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. இங்கு நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பும் 160 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உள்ள நிலையில், தேசிய அளவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது.


Leave a Reply