இதுவும் கடந்து போகும்… பாதுகாப்பாக இருங்கள்…! ரஜினி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நடிகர் ரஜினி வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் …இதுவும் கடந்து போகும் என தெரிவித்துள்ளார்.

சித்திரை முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்தத் துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

 

அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போடும் என ரஜினி பதிவிட்டுள்ளார்.


Leave a Reply