தூங்கிய கணவன்…மனைவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பால்காரன்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் உள்ள அறை ஒன்றில் காவலாளி மனைவியுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பின் வாசல் பகுதியில் காவலாளி காவல் பணியின் போது தூங்கிக் கொண்டிருந்த நிலையில் உள்ளே புகுந்த மர்ம ஆசாமி ஒருவன் ஒவ்வொரு குடியிருப்பாக நோட்டமிட்டுக் கொண்டே அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் காவலாளியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

 

வீட்டில் தனியாக இருந்த காவலாளியின் மனைவி வந்து கதவை திறந்ததும் வீட்டிற்குள் புகுந்து அந்த மர்ம நபர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாசலில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பி கண்ணீர் மல்க விவரித்துள்ளார் அந்தப்பெண்.

இதையடுத்து இதுதொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். பச்சை கலர் டீசர்ட் அணிந்து ஆசாமி ஒருவன் உள்ளாடையுடன் அங்கு சுற்றித் திரிவது தெரியவந்தது.

 

அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து அக்கம்பக்கத்தில் வீடுகளை மதில் சுவர் ஏறி குதித்து அங்கு ஏதாவது விலைமதிப்பு மிக்க பொருட்கள் கிடைக்கின்றனவா என தேடி பார்த்து பின் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து மேல் மாடியில் தனியாக இருந்த காவலாளியின் மனைவியை மிரட்டி பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

விசாரணையில் அவன் அமைந்தகரை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பதும் அந்தப்பகுதியில் வீடு வீடாக பால் பாக்கெட் போடும் வேலை பார்த்து வந்த போது ஆளில்லாத வீடுகள் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை போன்றவற்றை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையடுத்து பலாத்கார கொள்ளையில் ராமகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவலாளி பணியில் இருக்கும்போது தூங்கினால் அவர்கள் காவல் காக்கும் இடத்திற்கு பேர் ஆபத்தாகிவிடும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் இருந்ததால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவனை விரைவாக கைது செய்ய முடிந்தது என்கின்றனர்.


Leave a Reply