வாட்ஸ் ஆப்பில் வீட்டிலிருந்தே படிக்கும் கேந்திர விந்தியாலயா பள்ளி மாணவர்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகள் தங்கள் வகுப்புகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் கோடம்பாக்கத்தி நகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர். வீட்டிலிருந்தபடியே வாட்ஸ்அப் உதவியுடனும் ஆன்லைனிலும் ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்படுகிறது.

 

பள்ளி சீருடையுடன் பொறுப்பாக வீட்டிலேயே அமர்ந்து குணமாக பாடம் படிக்க தொடங்கியிருக்கின்றனர். காலையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. வகுப்பு தேர்வும் வைக்கப்படுகிறது. அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக செய்யப்படுகிறது. குழந்தைகள் பள்ளிகள் இருப்பது போலவே நினைத்து ஒரு பாடம் படித்து வருகின்றனர்.

 

இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது வீட்டிலிருந்து ஆசிரியை கொடுத்த வீட்டு பாடத்தை முடித்து அதனை வாட்ஸப்பில் போட்டோவாக எடுத்து பதிவிடுகிறார். அதை ஆசிரியர் திருத்தி மீண்டும் அனுப்பி வைக்கிறார். திடீர் விடுமுறையால் எந்தவகையிலும் தங்கள் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது அதேநேரத்தில் தரமான கல்வி அவர்களது வீடுகளுக்கே சென்று சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் வகுப்புகள் தொடங்கி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது பெற்றோர் தெரிவித்தனர்.

 

அதே நேரத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் பதினொன்றாம் வகுப்பிற்கும், பத்தாம் வகுப்பிற்கும் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்துடன் மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களை கழித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply