முட்டையின் விலை உயர வாய்ப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


முட்டை உற்பத்தியில் 50% வரை குறைந்துள்ளதால் வரும் காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் நிலை எழுந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து கோழி தீவன மூலப்பொருட்கள் வருகையில் தட்டுப்பாடு நிலவியதால் முட்டை உற்பத்திக்காக கோழிக்குஞ்சுகள் பண்ணையில் விடப்படாமல் இருந்து வந்தது. தற்போது கோழி தீவனம் கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது.

 

இருந்தாலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோழிக்குஞ்சுகளை பண்ணைகளில் விடாததால் முட்டை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 8 நாட்களில் மட்டும் 85 காசுகள் வரை உயர்ந்துள்ளது. தொடர் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் முட்டையின் விலை 5 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.


Leave a Reply