கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற வீடியோவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் செயற்கை சுவாசம் தேவைப்படுவோருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

 

அதற்காக மருத்துவர்களின் உடல் முழுவதும் மறைக்கும் வண்ணம் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்கின்றனர். பைபர் இழைகளால் செய்யப்பட்ட பெட்டிக்குள் பாதிக்கப்பட்டவருக்கு உட்செலுத்தி மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply