நீதிமன்றத்தில் இருமிய திருடன்..! கொரொனா பரிசோதனையில் அதிர்ச்சி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


லூதியானா நீதிமன்றத்தில் கைதி ஒருவர் இருமியதையடுத்து நீதிபதிகள் போலீசார் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாகனமொன்று திருடியதாக 25 வயது மதிக்கத்தக்க சௌரோஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார். உடனே நீதிபதி அவரை மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டதுடன் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே திருடனுக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

 

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். நேரடியாக நீதிமன்றத்தில் இரும்பியதை அடுத்து நீதிபதிகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அவருக்கு பாதுகாப்பாக 17 போலீசார் தங்களை தனிமைப்படுத்திக் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Leave a Reply