ஊரடங்கின்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதை பயன்படுத்தி சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கரூரில் டாஸ்மாக் கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்து வந்து டீக்கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஐந்து பேரை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களையும், திருமண மண்டபத்தில் பத்திரப்படுத்தி வைத்த காவல் துறையினர் அதனை பாதுகாத்து வருகின்றனர்.


Leave a Reply