தமிழகத்தில் ‘விஸ்க்’ முறை ! பாராட்டு தெரிவித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா தொற்றின் மருத்துவர்கள் பாதுகாப்பான கண்ணாடி அறையிலிருந்து பரிசோதிக்கும் விஸ்க் என்ற புதிய முறையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். ஸ்டான்லி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவில் கொரொனா வைரஸ் தொற்றை பரிசோதிக்க கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது.

 

அதில் இரண்டு கைகளுக்கு பெரிய கை உறையும் பொருத்தப்பட்டுள்ளது. கண்ணாடி அறையில் இருக்கும் மருத்துவர்கள் இந்த பெரிய கை உறையின் மூலம் நோய்த்தொற்று பரிசோதனை செய்கின்றனர். இந்த முறையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த புதிய முறைக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார் . விஸ்க் முறை மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்றும் இந்த நேரத்தில் தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் குழுவினரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் தமிழிசை தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply