3 மாத இலவச சிலிண்டர்..எப்படி?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு சிலிண்டர்களுக்கான மொத்த தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

 

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு தலா ஒரு சிலிண்டர் வீதம் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பயனாளர்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

 

ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் சிலிண்டருக்கான தொகையை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்ய உள்ளதாக கூறிய அதிகாரிகள் ஏற்கனவே முன்பதிவு செய்த பயனாளிகள் இந்த பணத்தை பயன்படுத்தி சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.


Leave a Reply