அடுத்த 2 வாரங்கள் மிக மிக வலி மிகுந்ததாக இருக்கும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகமிக வலி மிகுந்ததாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கடுமையான நாட்களுக்கு அமெரிக்கர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

உலகளவில் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி, கென்னடி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

இருப்பினும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அதிபர் மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க அதிபர் அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகமிக வலி மிகுந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.

 

கடுமையான நாட்களுக்கு அமெரிக்கர்கள் தயாராக வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் வைரஸ் தொற்று எனவும் கூறினார்.


Leave a Reply