--- --:--:-- --

பயணிக்கு கொரோனா – ஜன்னல் வழியாக விமானி வெளியேறினார்!

8

விமான பயணிகளுக்கு கொரொனா உள்ளதாக சந்தேகம் எழுந்ததால் விமானத்தை ஓட்டி வந்த விமானி ஜன்னல் வழியாக வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது. புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானம் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு கொரொனா உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

 

இதையடுத்து விமானம் தரையிறங்கிய போது அதில் பயணித்த பயணிகள் அனைவரும் பின்புற வாசல் வழியாக பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர். கொரொனா அச்சம் காரணமாக முன் வாசல் வழியாக இறங்காத விமானி விமானத்தின் முன்புற ஜன்னல் வழியாக வெளியேறினார்.

 

பின்னர் நடைபெற்ற பரிசோதனையில் விமானத்தில் பயணித்த யாருக்குமே கொரொனா இல்லை என்பது கண்டறியப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon