--- --:--:-- --

நெஞ்சுவலியால் ஓடும் ஆட்டோவில் உயிரிழந்த ஓட்டுனர்..!

7

சென்னை கொரட்டூரில் நெஞ்சுவலி காரணமாக ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சில அடி தூரத்திற்கு ஆட்டோ மட்டும் சென்று நின்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

கொரட்டூரிலிருந்து மதுரவாயில் நோக்கி ஆவின் சாலையில் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் என்பவர் சென்று கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழந்த நிலையில் ஆட்டோவில் இருந்த பிரகாஷ் விழுந்ததாக கூறப்படுகிறது.

 

அப்போது யாரும் இல்லாது ஆட்டோ மட்டும் சில அடி தூரம் சென்று அங்கிருந்து தடுப்பில் மோதி நின்றது. பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon