உலகில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குணமடைந்த இரண்டாவது நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 40 வயதான ஆதம் காஸ்ட்ரோ எவ்வித மருந்துகளும் இன்றி கடந்த முப்பது மாதங்களாக நலமாக வாழ்வதாக மருத்துவ இதழான லான்சட் தெரிவித்துள்ளது.
இந்த நபருக்கு ஹெச்ஐவி இருப்பது கடந்த 2003ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக நீண்ட கால மருந்து மாத்திரைகள் எடுத்து குணமடைந்த அவருக்கு கடந்த ஆண்டு கூடுதலாக எலும்பு மஜ்ஜை அறுவை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
எச் ஐ வி யில் இருந்து முதன் முறையாக குணமான ஜர்மன் நபர் தர்மோத்தி பிரமோனுக்கும் கடந்த 2007 இல் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக நலமுடன் உள்ளார்.
அதே சமயம் எல்லா எச்ஐவி நோயாளிகளுக்கும் இந்த மாற்று சிகிச்சை பலன் தராது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ நிபுணர் ரவீந்திர குமார் குப்தா தெரிவித்துள்ளார்.