9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த நான்கு லட்சத்து 75 ஆயிரம் டாலர் நன்கொடையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்போவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். குள்ள தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறலும் வீடியோ உலகையே உலுக்கியது.
அவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் கருத்து பதிவிட்ட நிலையில், அமெரிக்க நடிகர் பிராட் வில்லியம்ஸ் உருவாக்கிய பக்கத்தின் மூலம் இந்திய மதிப்பில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டது, அச்சிறுவனையும் அவர்களுடைய தாயையும் டிஸ்னிலேண்ட் அனுப்ப திரட்டப்பட்ட இந்த நிதியை பணத்தின் தேவை அதிகமுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அவரது தாய் அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




